மாவனல்லை பிரதேச தளமாகக் கொண்டு எமது ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அரச அங்கீகாரத்துடன் இயங்கிவரும் தனியார் ஊடக நிறுவனமாகும்.

இதில் ஜே.எம் என்ற எழுத்துக்கள் Justice & Moral என்பதாகும். இது தமிழில் நீதியும் ஒழுக்கமும் என்று பொருள்படும். 




ஜே.எம் மீடியா கல்லூரி என்ற பெயரிலான ஊடக பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில்  P08/0107 P08/0107 என்ற பதிவிலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும்.
TVEC (Tertiary and Vocational Education Commission) அங்கீகாரம் பெற்றதாகும். அது மட்டுமல்லாது சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் மற்றும் மாவனல்லை வலயக் கல்விப் பணிமனையின் பரிந்துரையின் அடிப்படையில் 04201 என்ற இலக்கத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஜே.எம் மீடியா அங்கீகாரம் பெற்ற ஊடக நிறுவனம் என்ற வகையில் ஊடக பயிற்சிகளை வழங்கும் இடங்களை முறையாக பதிவு செய்ய ஊடக அமைச்சின் கீழ் எந்த அதிகார சபையும் இல்லாத போதும், ஜே.எம் மீடியா கல்லூரியை சட்ட ரீதியாக நடத்துவதற்காக மேற்குறிப்பிட்ட  இடங்களில் பதிவு செய்துள்ளோம்.



ஜே.எம் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் ராஷித் மல்ஹர்தீன் (RAASHID MALHARDEEN) ஆகும். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நிறைவு செய்தவர். மற்றும் இந்திய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காட்சி தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர் சீனா நாட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டவர். இலங்கையின் முதலாவது HD தமிழ் தொலைக்காட்சியான UTV வியின் பிரதி செய்தி முகாமையாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றுகிறார். UTV இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும், இது மேல் மாகாணம் முழுவதும் UHF 54 இலும் நாடு முழுவதும் DIALOG மற்றும் PEO தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 


 ஜே.எம் மீடியா நிறுவனத்தின் இணை நிறுவனரான ரஸா மல்ஹரதீன் ஒரு வலையமைப்பு பொறியியலாளர் பட்டதாரி. கொழும்பு பல்கலைக்கழகத்தில் படைப்பு வளர்ச்சி மற்றும் கிராபிக் வடிவமைப்பு பயிற்சி நெறியையும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் ஆலோசனை கற்கை நெறியையும் நிறைவு செய்தவர்.

இவர்கள் இருவரினதும் மேற்பார்வையின் கீழ் இயங்கும் ஜே.எம் மீடியா கல்லூரிக்கு பல துறை சார்ந்த விரிவுரையாளர்களும் தொடர்ச்சியாக வருகை தந்து விரிவுரைகளை நடாத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் வருடந்தோறும் ஜனவரியில் அகில இலங்கை ரீதியிலான MEDIA TIPS இலவச ஊடக கருத்தரங்கை நடாத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். சுமார் 500 மாணவர்கள் வருடா வருடம் கலந்து கொள்வதோடு, இதன் மூலம் சுமார் 3000 க்கும் அதிகமான ஊடக ஆர்வலர்கள் இலவசமாக பயன்பெற்றுள்ளனர்.  இதேவேளை, பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதே போன்ற இலவச ஊடக செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. இதன் மூலமும் பல ஆயிரக்கணக்கானவர்களின் ஊடக அறிவு மேம்படுத்தப்பட்டுள்ளது.


அதன்படி மாணவர்களின் நன்மை கருதி அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களை மையப்படுத்தி ஜே.எம் மீடியா கல்லூரி திட்டமிட்ட பாடத்திட்டம் ஒன்றை வகுத்து 03 மாத கால பயிற்சி நெறியாக இளம் ஊடகத்துறை ஆர்வலர்களுக்கு பயிற்சிகளை பல வருடங்களாக வழங்கி வருகின்றது. வெற்றிகரமாக 9 குழுக்களை நிறைவு செய்துள்ளதோடு, 10ஆவது குழுவுக்கான அழைப்பையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த பாடத்திட்டத்திற்கான கோட்பாட்டு ரீதியான பயிற்சியையும் செயற்முறை  (Theory & Practices)  பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம். கள ஆய்வு, தகவல் திரட்டல் போன்ற பல சிறப்பு செயற்பாடுகளையும் நாம் எமது மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம்.
 
அதிகளவில் செயன்முறைப் பயிற்சிகளுடன் கூடிய விரிவுரைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக அறிவிப்புத்துறை, செய்தி வாசித்தல், புகைப்படத் துறை, போன்றவற்றைக் குறிப்பிடலாம். எமது மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியினை வழங்கும் நோக்கில் இதற்கு தேவையான முக்கியமான ஊடகக் கருவிகள் எம்மிடம் காணப்படுகின்றமையால் உண்மையான உணர்வுடன் பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. உதாரணமாக தொலைக்காட்சி செய்தி வாசித்தல் செயன்முறை வகுப்பில், கேமரா முன்னால் அமர்ந்து அதற்கு ஏற்ற ஒளிவிளக்குகளுடன் கலையத்தில் செய்தி வாசிப்பது போன்ற ஒரு உணர்வுடன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் பிரதிபலனே எமது மாணவர்கள் இன்று தேசிய ரீதியிலான ஊடகங்களில் பணியாற்றுவதாகும்.



இதற்கு மேலதிகமாக  Adobe Photoshop,  Adobe Premiere Pro, Adobe Audition   போன்ற செம்மையாக்கல் (Editing) மென்பொருள்களும், கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் துறை  (Mobile Journalism) சம்பந்தமான விடயப்பரப்புக்களும் இங்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். இனிவரும் காலங்களில் சரியான புலனாய்வு செய்தி அறிக்கையிடல் குறித்த பாடப்பரப்பையும் உள்ளடக்கவுள்ளோம்.



ஊடகத்துறையயோடு மாத்திரம் எமது கற்பித்தலை மட்டுப்படுத்தாமல் வாழ்க்கை குறித்த பாடங்களும் வெற்றியின் இரகசியங்களும் உள்ளடக்கபட்டுள்ளதோடு தான் பணியாற்றும் துறையில் நட்சத்திரமாக ஜொலிக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் கற்றுக்கொடுக்கப்படுகின்றமை ஜே.எம் மீடியா கல்லூரியின் தனிச் சிறப்பு எனலாம்.

ஜே.எம் மீடியா கல்லூரியில் கற்கும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக துதி எப்.எம் மற்றும் துதி டிவி (யூடியுப்) என்பவற்றை நடாத்தி வருகின்றது. மாணவர்கள் சுயமாக முன்வந்து சந்தர்பங்களை எதிர்பார்க்கும் போது அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் முன்னிற்க தவறியதில்லை.

அத்துடன் எமது பயிற்சி வழங்கும் குழுவில் இந்நாட்டின் துறைசார்ந்த சில ஊடக பயிற்றுவிப்பாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டே பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொண்டு வருகிறோம். அத்தோடு ஊடக அறிவும் அனுபவமும் கற்பிக்கும் திறனும் கொண்ட வளவாளர்களே ஜே.எம் மீடியா கல்லூரியின் வளவாளர்களாக தெரிவு செய்யப்படுவர்.

இலங்கையில் முன்னணி ஊடக பயிற்சி நெறிகளை நடத்தக்கூடிய கொழும்பு பல்கலைக்கழக ஊடக டிப்ளோமா மற்றும் ஊடகவியல் கல்லூரியின் ஊடகவியல் டிப்ளோமா பாட நெறியில் கூட குறிப்பிட்ட பாட விடயப் பரப்பை கற்பிப்பதற்கு தேவையான விரிவுரையாளர்களை வாராந்தம் அழைத்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நாமும் அதே வழிமுறையை பின்பற்றி ஒவ்வொரு தலைப்பிலான விடயபரப்பிற்கும் உரிய அனுபவமும், அறிவும், ஆற்றலும், நிபுணத்துவமும் கொண்ட வளவாளர்களை (Lectures)  வரவழைத்தே பயிற்சி நெறியை நடத்தி வருகிறோம்.




தவிர குறித்த கட்டுரையில் சொல்லப்பட்டது போன்று நாம் எப்போதும் ஊடக ஆர்வம் கொண்ட இளம் சந்ததியினரை ஏமாற்றும் அல்லது தவறான வழிக்கிட்டுச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதற்கு ஜே.எம் மீடியா கல்லூரியில் கற்ற மாணவர்கள் சாட்சி. புலனாய்வு என்ற பெயரில் புனையப்பட்டு எழுதப்பட்டிருந்த குறித்த கட்டுரையில் எம்மிடம் கற்ற மாணவர்கள் தேசிய ஊடகங்களில் பணியாற்றவில்லை என எழுதப்பட்டிருந்தது. இதற்கான புகைப்பட சாட்சியங்கள் ஒரு சிலவற்றை நாம் இங்கு இணைத்துள்ளளோம்.






எமது மாணவர்களின் கருத்துக்கள் அடங்கிய காணொளியை ஜே.எம் மீடியா.எல் கே  (JMmedia.LK - https://www.youtube.com/c/JMMedialk/videos) என்ற எமது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.

வயதெல்லை இன்றி நடைபெறும் இந்த பயிற்சி  நெறியில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வியாபாரிகள், பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அனைவருக்கும் மிக எளிய முறையில் விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் மிகவும் பிரயோசனமான பாடத்திட்டத்தை ஜே.எம் மீடியா கல்லூரி வழங்குகின்றமை மிக விஷேட அம்சமாகும். ஜே.எம் மீடியா கல்லூரி குறித்த தெளிவுகளுக்கு 0777954030 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு 100% திருப்தியை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது ஜே.எம் மீடியா கல்லூரியின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்றாகும்.

எம்மை நாடி வருபவர்களுக்கு தரமான ஊடக அறிவையும் தெளிவையும், பயிற்சிகளையும் வழங்குவதோடு சிறந்த சமூக பிரஜையாக வாழ்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதே மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரியின் ஓரே இலக்காகும்.

ரஸா மல்ஹர்தீன் | Raza Malhardeen
Co-Founder,

JM MEDIA Production & College



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.