இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீமின் கைது தொடர்பில் எந்த நாட்டில் இருந்து அழுத்தம் வந்தாலும் விசாரணைகள் தொடரும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இந்த கைது தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"யாரையும் தேவையில்லாமல் தடுப்புக் காவலில் வைக்கவில்லை. இந்த இளம் கவிஞரை அநியாமாக தடுத்து வைக்கப்படிருந்தால் அடிப்படை உரிமை மனுவினை தாக்கல் செய்ய முடியும்" என அமைச்சர் தெரிவித்தார்.

"சிறுவர் வைத்தியர்களின் கருத்துப் படி இந்த கவிஞரின் நூல்கள் சிறுவர்களை மூலச்சலவை செய்கின்றது. அத்துடன் அடிப்படைவாதம் தொடர்பான கருத்துக்களை தனது வெளியீட்டில் வெளியிட்டமையினால் தான் இவர் தடுப்புக் காவலில் உள்ளார்" என அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நன்றி - விடியல்



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.