தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக பாணந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் உயிரிழந்த நபரின் இல்லத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று (09) விஜயம் செய்திருந்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முகநூல் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில்,

"கொரோனா சட்டத்தை மீறிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட பாணந்துறை நபர் ஒருவர் உயிரிழந்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு நானும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் சகிதம் இன்று விஜயம் செய்தோம். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் இருவர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்."

"எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம்."

"இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் அங்கு சென்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.