அன்பின் பெற்றார்களே! 
👨‍👨‍👦
பிள்ளைகளுக்கு நாமும் ஒரு கற்றல் சாதனம்
👨‍👨‍👧‍👧👩‍👩‍👦‍👦 

கற்றல் முறைகள் பற்றி கல்விஉளவியலில் சில முக்கியமான நுற்பங்கள் காட்டித்தரப்பட்டுள்ளன. 
அதில் ஒன்றுதான் மற்றவர்களை பின்பற்றுவதன் முலம் கற்றல். 
இது முக்கியமானதொறு கற்றல் முறையாகும். 

நாமும் மற்றவர்களை பின்பற்றுவதன் முலம் அவர்களது செயற்பாடுகளை பார்ப்பதன் முலம் பலதை கற்றிருப்போம். கற்றதை வாழ்வில் கடைபிடித்துமிருப்போம். 
நாம் எல்லோரும்போலவே எமது அழகான பிள்ளைப்பருவத்தில் புத்தகங்களில் இருந்து கற்றுக்கொண்டதைவிட பெற்றோரின் மற்றும் ஆசிரியர்களின் நடத்தை முறைகளையும் அவர்களது செயற்பாடுகளையும் கண்டு பலவற்றை கற்று வாழ்க்கை முறைக்குள் சேர்திருப்போம்.
 
வீட்டில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் தாயை, தந்தையை அல்லது மூத்தவர்களை  பின்பற்றுகின்றனர். 
எதை பின்பற்றுகிறார்கள் என்றால் எல்லாவற்றையும் பின்பற்றுகிறார்கள். 
🎈நாம் பேசும் மொழியை,  
🎈பேசும் முறையை,  
🎈பேசும் விடயங்களை,
🎈செய்கின்ற வேலைகளை,       🎈செய்யும் முறைகளை,
🎈பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் விதங்களை, 
🎈தீர்மானம் நிறைவேற்றும் நுற்பங்களை,
🎈புத்திமதி மற்றும் ஆலோசனை வழங்கும் முறைகளை,
🎈மற்றவர்களோடு உறவுபேணும் முறைகளை 
இப்படி பலதையும் பின்பற்றுகிறார்கள். பின்பற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அவை சரியோ, பிழையோ எப்படியிருந்தாலும் அவற்றை சரியென்று ஏற்றுக்கொள்கிறார்கள். 

அன்பின் பெற்றார்களே! 
எம்மையும் எமது ஒவ்வொரு செயற்பாட்டையும் எமது பிள்ளைகள் சரியென்று ஏற்றுக்கொண்டு அவற்றை பின்பற்றுகிறார்கள் என்றால் ...
⭐ நாமும் எமது செயற்பாடுகளும் எமது பிள்ளைகளால் பின்பற்றப்படுமளவிற்கு பொருத்தமானவையா?
⭐ அவற்றை பின்பற்றுவதன் முலம் அவர்களால் அழகான ஆரோக்கியமான மனிதர்களாக ஆகமுடியுமா? 
⭐ எமது நடத்தைகளால் ஒரு அழகான ஆக்கபூர்வமான பரம்பரை உருவாக கைகொடுக்க முடியுமா? 
இந்த வினாக்களை பலவிடுத்தம் நாம் கேட்டுப் பார்ப்போம். 

நாம் இறந்துபோனாலும் நாம் உருவாக்கிச்சென்ற நடத்தை முறைகள் இறந்துபோவதில்லை. அவை பல கோணங்களில் பிள்ளைகள் வாழ்வில் மாற்றமடையலாம். அவை பயனுள்ளவையாக எமது உறவுகளில் செல்வாக்கு செலுத்தலாம் அல்லது நோயுற்ற ஒரு பரம்பரை மண்ணில் வாழ வாய்ப்பாகவும் அமையலாம். 

இன்று எமது சமூகத்தில் பண்பாடு மோசமாகியிருக்கிறது என்றும் வாலிபர்கள், இளம்பருவத்தினர் கட்டுப்பாடு மீறி நடக்கின்றார்கள் என்றெல்லாம் அடிக்கடி சொல்லக்கேட்கிறோம். 

அதற்கான காரணம் ..
♦️ அவர்களது பிறப்பிலிருந்து அல்லது பிள்ளைப்பருவத்திலிருந்து பண்பாடற்ற நடைமுறைகளை கண்டதும் அவற்றை தொடர்ந்து பின்பற்றிவருவதுமாக இருக்கலாம். 
♦️ வாழ்க்கையில் வெற்றிபெர தேவையானவை என்ன என்பதை சரியாக கொடுக்காமையும் எடுக்காமையும் மற்றொரு காரணமாகலாம். 

அன்பின் பெற்றார்களே! 
எமது பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கான மிகச்சிறந்த காட்சிப்பொருளாக, கற்றல் சாதனமாக நாம் இருக்கின்றோம் என்பதை நினைவில் நிறுத்தி எமது நடத்தைகளை நாணமுள்ளவையாக, மனதிற்கு மகிழ்வை தரக்கூடியனவாக ஆக்கிக்கொள்வோம். அதன் மூலம் வளமான பரம்பரையொன்று மண்ணில் மலர விதையிட்டவர்களாக நாங்கள் ஆகலாம்.
🎗️🎗️🎗️
---------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.