UK அரசாங்க உத்தியோகபூர்வ இணையத்தில் Error 503 காண்பிக்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை இணையத்தில் இவ்வாறு ஆரம்பத்தில் வந்திருந்த போதும் இணையத்தளம் வழமைக்கு திரும்பியுள்ளது.

பிரிட்டன் அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் Newyork Times, Financial Times, CNN, Bloomberg News உள்ளிட்ட பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

கட்டார் நாட்டினை தளமாக கொண்டு இயங்கும் அல் ஜசீராவும் பாதிக்கப்பட்டதாக அந்த இணையம் தெரிவித்திருத்துள்ளது. எனினும் அல் ஜசீரா இணையத்தளம் தற்போது இயங்குகிறது.

மேலும் Amazon நிறுவனத்தின் விற்பனை இணயமும் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

பிபிசி, சி என் என் இணையத்தளங்கள் ஆரம்பத்தில் செயலிழந்த போதும் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளன.

முடக்கப்பட்ட இணையத்தளங்களில் “Error 503 Service Unavailable” மற்றும் “connection failure” போன்ற வசனங்கள் திரையில் தோன்றியுள்ளன.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.