எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பௌத்த அரசு என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டு மக்கள் மீது நிறைய அழுத்தங்களை செலுத்தியுள்ளது. மகா சங்கத்தின் ஆசீர்வாதத்துடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, காவந்திஸ்ஸ மன்னர் போன்று ஏழு மூளைகளுடன் மறுபிறவி எடுத்தவர் நேற்று நிதியமைச்சராக பதவியேற்றுள்ளார் என்று குறிப்பிட்டனர்.ஆட்சிக்கு உதவி மகா சங்க உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்படுவதைக் நாங்கள் கண்டோம், வயதான பெண்கள் சிறு துண்டுகளைப் போல் தூக்கிச் சென்றதைக் கண்டோம்,கொதலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள்,  துறவிகள், முதியோர் பெண்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைப் கைது செய்த இந்த பௌத்த அரசாங்கத்தை பார்த்தோம். போராட்டங்களை அடக்க ஐ.ஜி.பிக்கு சுகாதார பனிப்பாளரின் கையெழுத்திட்ட கடிதத்தை பயன்படுத்தி கொவிட் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அடக்குமுறை செயல்முறைக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டுகிறோம்.

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டைக் கட்டியொழுப்ப என்ன செய்ய முடியும் என்பதை பசில் ராஜபக்ஷவால் மட்டுமே முடியும் என்று கூறுகிறார்கள். இதன் பொருள் ஜனாதிபதி பதவியேற்ற அவரும் பெய்ல்  பின்னர் அமைச்சரவை பெய்ல் என்பதையே. பசில் வந்து விட்டார். டொலர் பற்றாக்குறை குறையுமா,அத்தியவசிய பொருட்களின் விலை குறையுமா, அரிசியின் விலை குறையுமா,100 ரூபாவிற்கு பருப்பு கிடைக்குமா,சுற்றுச்சூழலை அழிப்பது நிறுத்தப்படுமா, அரச வளங்கள் விள்க்கப்படுவது நிறுத்தப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து நம்புயுள்ளனர்.ஆனால் அவரால் தான் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றும் கூறுவதனால் எப்போது மக்களுக்கு  நிவாரணம் வழங்கப்படும் என்றும் நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில், தேசத்தக்கு  உரையாற்றிய ஜனாதிபதி, 10,000 பாடசாலைகளுக்கு பைபர் ஒளியியல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இலங்கையில் 10155 பாடசாலைகள் உள்ளன என்பது அவருக்குத் தெரியாது. பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சர் சமீபத்தில் எந்தப் பாடசாலைக்கும் வழங்கப்படவில்லை என்று கூறினார். இரத்தினபுரியில் ஆரம்பிப்பதாக கூறினர்.தற்போது பசில் வந்து விட்டார்,இதன் பிறகு சகலதும் முறையாக இடம் பெறும். கடல் அழிவினால் ஏற்ப்பட்ட சோதங்களுக்கான பெறுமதி மீள வரும் என்றும், மீனவர்களுக்கு நிவாரணம் பெற முடியும் என்றும்,தொழில் இழந்தவர்களுக்கு மீள தொழில் வழங்கப்படும் என்றும்,புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்குறோம்.

கொதலாவல பல்கலைக்கழக  இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் கொண்டு வந்தது. ஏனைய நாடுகளில் பாதுகாப்பு அகடமிகளும் கல்லூரிகளும் தான் உள்ளன.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கடவுள் தான் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.எதிர்க் கட்சியின் முயற்சியால் இந்த சட்ட மூல வாக்கொடுப்பு ஆகஸ்ட் வரை பிற்படுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும், நாட்டில் உள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புகளும் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் எழுப்புகின்றன. அது நிறைவேற்றப்பட்டால் இந்த விஷயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு பல்கலைக்கழகங்கள் மீது முழு கட்டுப்பாடுகளும் இருக்கும். அதிகாரங்களும் அவரிடமே இருக்கும்.

இந்த நிதி அமைச்சரின் வருகைக்கு பிறகு மின் உற்ப்பத்தி நிலையமொன்று தனியார் மயமாக்க தீர்மானித்துள்ளனர்.அதுவும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு,அதற்கான  டெண்டர்களை அழைக்காமல்  மின் உற்பத்தி நிலையம் தனியார்மயமாக்க  தயாரிக்கப்படுவதாக அறியப்பட்டது.

முத்துராஜவேலவில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை  சீனாவுக்கு வழங்க ஒரு திட்டம் உள்ளது. அதையும் டெண்டர் கோராமலயே வழங்க முற்படுகின்றனர்.நுரைச்சோலை மின் உற்பத்தியையும் சீனாவிற்கு விற்கப்போகிறது.அரசாங்கம் அனைத்து மதிப்புமிக்க நிலங்களையும் விற்கப் போகிறது.

இப்போது திரு.பசில் ராஜபக்ஷ அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற பணம் சம்பாதிக்க  வந்துள்ளார் போல், எனவே தான் அவர் டெண்டர்களை அழைக்காமல் இதைச் செய்யப் போகிறார்.நாம் நாட்டின் மின் உற்ப்பத்தி ஆற்றல் வெளிநாட்டினருக்குச் சென்றால் என்ன நடக்கும்? நாங்கள் நாட்டை வெளிநாட்டினருக்கு வழங்க அனுமதிக்க மாட்டோம். ஆர்ப்பாட்டங்களை அடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்க் கட்சியில் இருக்கும் போது என்ன கூறுனர் என்று மக்கள் நன்றாக அறிவர்.ஒரு அமைச்சர் சமீபத்தில் ஒரு காகம் கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டால் என்ன செய்ய என்று கூறினார்.எதிர்க்கட்சி இதற்கொள்ளாம் பயப்படும் என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார்.  

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்பு  திரு.பசில் ராஜபக்ஷ தான் பொருளாதார அமைச்சராக இருந்தார்.அப்போது அவர் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் வசந்தம் என்று அழைக்கப்பட்ட பல திட்டங்களை முன்னெடுத்த போதும் கூட மக்கள் தோற்கடித்தனர்,இதனால் தான் அப்போது மஹிந்த ராஜபக்ஷ வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. வாக்களித்த அறுபத்தொன்பது இலட்சம் மக்கள்  ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று நினைத்து  மனநோயால் பாதிக்கப்படுகிறார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் சுவர்களில் படங்களை வரைவதைக் கண்டோம். இப்போது அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். அந்த சுவர் சித்திரங்களை மறைத்து பசிலினுடைய வருகையைத் தொடர்ந்து சுவரொட்டிகளை பதித்துள்ளனர்.பலகையையும் அகற்றியுள்ளனர்.ஜனாதிபதியின் பயணப் பாதை காரணமாக மொரகஹகந்த-பிலியந்தலை வீதியின் இரு பக்கங்களிலுமுள்ள பலகை சிறு கடைகளை ஜனாதிபதிக்கு அசிங்கம் என்று அகற்றியுள்ளனர்.பழக் கடை, வெற்றிலை கடை போன்ற சாதாரண மக்களின் கடைகளை இவ்வாறு அகற்றியுள்ளனர், இவ்வாறு அகற்றுவதன் மூலம் அரசாங்கம் அடக்குமுறையைத் தொடங்கியுள்ளது. உதவியற்ற மக்களின் பலகைகளினாலான கடைகளை அகற்றி அடக்குமுறையை பிரயோகிப்பதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மக்கள் பக்கம் நின்று போராடும்.

இன்று மக்களுக்கு வாழ்வது கடினம். சுற்றுச்சூழல் அழிவு நடைபெறுகிறது. வானமும் பூமியும் அழிக்கப்பட்டு வருகின்றன. கடல் அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்தில் சாத்தியப் படுத்த மேற்கொண்ட உரம் சார்ந்த தீர்வால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இன்று அரிசியை இறக்குமதி செய்ய முற்படுகின்றனர்.இந்த அரிசி எந்த உரம் போடப்பட்ட அரிசியே தெரியாது.நெல் அறுவடை 30% ஆலும் தேயிலை அறுவடை 50% ஆலும் குறைவடையும்.தேயிலை பயிர் அறுவடையால் எங்களுக்கு அந்நிய செலாவணி குறைவடையும். அந்த வருமானம் குறையும் போது, ​​சிலோன் டீ என்ற பெயர் உலகத்திலிருந்து மறைந்துவிடும். அதற்காக மற்ற நாடுகள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கும். 

10 வருட திட்டத்தை ஒரு வருடத்தில் ஏற்ப்படுத்தினால் இது தான் ஏற்ப்படும்.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் அந்நியச் செலாவணியில் பாரிய குறைபாடுள்ளது.

ஏழு மூளைகளைக் கொண்ட நிதி அமைச்சர்  இவற்றுக்கு என்ன செய்வார் என்று நாங்கள் காத்திருக்கிறோம். பிரச்சிணைகளுக்கு தீர்வு வழங்கி, மக்களை அடக்காமல் நாட்டை கட்டியொழுப்ப புதிய நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியாக கோருகிறோம்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.