இலங்கையில் கொவிட் வைரசு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அலுலங்கள் மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்களில் தொற்று தொடர்பான விதிகளை கடைபிடிக்கப்படுவதில் போதிய கவனம் செலுத்தப்படுவதைக் காணக்கூடியதாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, திவுலப்பிட்டி, பேலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகளில் தொற்றுக்கு இலக்காகி இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 95 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 329 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

66 கொவிட் மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த புதன்கிழமை உறுதி செய்தார். 60 வயதிற்கு மேற்பட்ட 49 பேர் இதில் அடங்குகின்றனர். 30 வயதில் இருந்து 59 வயதிற்குட்பட்ட 17 பேரும் இதில் உள்ளடங்கியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.