ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது இழுத்தடிப்பு செய்தால், தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும், வெற்றி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் அமைச்சரவையில் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் என்ன உள்ளது? அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு என்று நாம் தொடர்ந்து வினவி வருகிறோம். ஆனால், உரிய பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அமைச்சரவை துணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியதாகவும் பிரதமருடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே உறுதியளித்தது போல், வெள்ளிக்கிழமைக்கு (30) முன்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், எதிர்காலத்தில் பல்வேறு வழிகளில் போராடுவோம் எனவும் வெற்றி கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.