இன்று மாலை (08) கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.

காலையில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப முற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியிருந்தது. 

"நேற்று நீர்கொழும்பில் அமைச்சர்கள் உட்பட 50, 100 பேர் விருந்து ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அது தவிர பசில் ராஜபக்சவின் பதவியேற்பை தொடர்ந்து பல பிரதேசங்களில் பல நூறு பேர் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நீதி எங்கே?" என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க  அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.