சிறுவர்களை பணிக்கமர்த்தியுள்ள இடங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011 2 433 333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இதுதெடர்பாக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 16 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களை தேடி நேற்று (27) முதல் மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் குற்றப்புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைவாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 30 இடங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த தேடுதல் நடவடிக்கைள் இன்றைய தினமும் (28) முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இலங்கையின் மத்திய மலையக பிரதேசத்தில் இருந்து இவ்வாறு சிறுவர்கள் அழைத்துவரப்படுவதாக அடிக்கடி தகவல் வெளியாகுகின்றன என்றும் தெரிவித்தார். (Siyane News)

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.