அரசாங்கம் விளையாடும் கொடிய விளையாட்டின் சோகம் நெருங்கிவிட்டது!

கொடூரமான கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டதாக செயற்படவில்லை.உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

*குறுகிய காலத்திற்கு நாடு முழுவதும் அல்லது பெரிய பகுதிகளில் ஊரடங்கு* உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதோடு,

அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், இலங்கையில் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 30,000 ஆக உயரும் என்று எதிர்வு கூறியுள்ளது.

இந்த பேரழிவு தருணத்தில் இருக்கும் கடுமையான ஆபத்தை கருத்தில் கொண்டு, எமது வல்லுநர்கள் நாட்டை ஒரு குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டும் என்று எச்சரித்தனர், ஏனென்றால் மக்களின் வாழ்க்கை வேறு எதையும் விட எங்களுக்கு முக்கியம் என்ற படியாலாகும்.

✅இருப்பினும், ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டினாலும், இனம்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும், அவர்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்து அரசாங்கம் சிறிதளவெனும் கருத்திற் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது, தொற்று மற்றும் இறப்பு என்பது எண்களின் விடயம் சார்ந்த ஒரு சூதாகவே அவர்களுக்கு புலப்படுகிறது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட, கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளதாகவும், 250 க்கும் மேற்பட்ட இறப்புகள் உள்ளதாகவும் மருத்துவமனைகளின் அதிகாரப்பூர்வமற்ற தரவுகள் கிடைக்கப்பெறுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.அதிகாரபூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகள் இருப்பதைக் இது குறிக்கிறது.

✅இத்தகைய பேரழிவு இருந்தபோதிலும், கொரோனா பரவலுக்கான குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கம் கைகளைக் கழுவிக் கொண்டு அதை மக்கள் மீது போட்டு கொள்ள முயற்சிக்கிறது.

✅மக்களின் மரணத்தை அரசியலாக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் தவிர இந்த நேரத்தில் நாட்டைத் திறந்து வைக்க யாராலும் முடிவெடுக்க முடியாது.அந்தளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.

✅*கொரோனா பேரழிவு தொடங்கியதில் இருந்து இந்த நாட்டு மக்கள் பொறுப்புடன் *செயல்பட்டுள்ளனர் என்பதும்,அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளது என்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.அரசாங்கம் தனது விருப்பப்படி தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியது மற்றுமன்றி அதிகார தேவைகளுக்காக அத்தகைய சட்டங்களை மாற்றியது, அதன் ஓர் திட்டமாக பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுத்து, 20 ஆவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்தை கூட்டி, கொரோனா விரிவாக்கத்தை பரிசோதிக்க சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்ததோடு கொரோனா இல்லாத நாடு என்று கூறி, இலங்கைக்கு "கொரோனாவை அழைப்பதன் மூலம்" அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டது என்பது அருவருப்பானது.இந்த தன்னிச்சையான முடிவுகளின் துயர விளைவுகளை அனுபவிப்பது இந்த நாட்டின் அப்பாவி மக்கள்தான்.

✅கொரானாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 80% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்று அரசாங்கம் கூறி மக்கள் மீது அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது என்றாலும்,தேவைப்படும்போது தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு பதிலாக கட்டுக்கதையை சமூகமயமாக்கியது அரசாங்கமே என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டும்.மக்கள் தடுப்பூசி பெற ஊக்குவிப்பதற்குப் பதிலாக பானி என்று அழைக்கப்படுவதைத் தொடர ஊக்குவித்தது அரசாங்கமே என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது.

✅பொருளாதாரம் குறித்த ஒரு பயத்தை உருவாக்கி,நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் ஒரு முடிவை எடுக்காதுள்ளது."*பொருளாதாரம் அல்லது  ஒக்ஸிஜன்" என்ற இரண்டில் எதை விட எது முக்கியமானது என்னவென்று புரியாத அரசாங்கத்திடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

✅ஒரு பொருளுக்கு ஒரு கிலோ கோழிக்கு சந்தையில் விலை நிர்ணயிக்க முடிந்தாலும், ஒரு மனித உயிருக்கு சந்தையில் விலை கொடுக்க முடியாது என்பதை அரசாங்கம் கூட உணர வேண்டும்.இந்த உண்மையைப் புரிந்துகொள்ள ஒரு அரசாங்கம் எடுத்த முயற்சி கூட நேரத்தை வீணடிப்பதற்கு ஒப்பானதாகும்.

✅நாங்கள் மிகவும் நேர்மையுடன் முன்வைக்கும் அனைத்து திட்டங்களும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட நிபுணர்களின் முன்மொழிவுகளையும் அரசாங்கம்,வழக்கம் போல்,காலையில் துப்புவது போல் நிராகரித்து* "உயிருடன் விளையாடுகிறது"*,அந்த கொடிய விளையாட்டின் முடிவு எவ்வளவு துயரமானது என்பது விரைவில் புரியும்.எனவே, "கொரோனாவிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு" நாங்கள் மக்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.


சஜித் பிரேமதாச

எதிர்க் கட்சித் தலைவர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.