இன்று(03) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்த கருத்துக்கள்.

கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது.இந் நாட்டில் கோவிட் பரவல் முற்றாக இல்லாமல் ஆகியது போல அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருந்தன.இன்று நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்த வருகின்ற நிலையில் கட்டுப்பாட்டு விடயங்களில் அரசாங்கம் நெகிழ்வு போக்கை கையாள்கிறது. எத்தரப்பின் ஆலோசனைகளின் பிரகாரம் இவ்வாறு அரசாங்கம் செயற்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் பாரிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்று விஷேட வைத்தியர் மலிக் பீரிஸ் உள்ளிட்ட பலரும் எச்சரித்துள்ள நிலையில் பொறுப்பற்ற விதத்தில் அரசாங்கம் செயற்படுகிறது.

இன்று ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பது ஒர் அதிஷ்ட சீட்டிழுப்பு கிடைப்பதற்கு ஒப்பானதாகும். அந்தளவு சமூக பரவல் இடம் பெறுகிறது. இன்று அவசர படிக்கைகள் இருப்புக்காக தனியார் வைத்தியசாலையில் பாரிய முன் கோரல்கள் இருக்கிறது. தனியார் வைத்தியசாலையிலும் இவ்வாறான நிலையே காணப்படுகிறது.100 இருக்க வேண்டிய வைத்தியசாலைகளில் 400 பேர் இருக்கிறார்கள்.காட்போர்ட்,பொலித்தீன் மற்றும் பத்திரிகளைகளை விரித்த வன்னம் தரையில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது எந்தத் தரப்பின் ஆலோசனைகளின் பெயரில் இவ்வாறான தீர்வுகளை எடுத்து நெகிழ்வு போக்கை கையாள்கிறது என்பதில் சிக்கல் தன்மையுள்ளது. 4571 கொவிட் மரணங்களுக்கு தம்மிக பாணியின் பின்னால் சென்ற, ஆற்றில் முட்டி வீசிய அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக சமூகத்தில் எழுந்திருக்கும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளது.

நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய புலமைத்துவ ஒன்றியம் பல்கலைக்கழ மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யக் கோரி நீதிமன்றத்தில் ஆட்சோபித்திருந்தும் நீதிமன்றம் நடு நிலையாக செயற்ப்பட்டு எமக்கு ஆதரவை வழங்கியதற்கு நீதித்துறைக்கு நன்றி செலுத்துகிறோம். 

ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக் கோரிக்கைக்கு உரிய தீர்வுகளை வழங்காமல் அரச அதிகாரிகளை மீண்டும் சேவைக்கு அழைத்தமை ஏற்புடைய விடயமல்ல. நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கூட இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.கர்ப்பிணிப் பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் இருக்கின்றனர்.இவர்களை சேவைக்கு அழைப்பதை தடை செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் எவ்வாறு தான் இது போன்ற மனசாட்சியற்ற விதமாக நடந்து கொள்கிறதோ புரியவில்லை. 

இன்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் ஒரு தரப்பின் தனி ஆளுகைக்கு உட்பட்டுள்ளது போல.சுகாதார தரப்பிடம் வினவினால் பதில் கிடைப்பதற்கும் நாள் கணக்குகள் செல்கின்றன. அவ்வாறு மேற்கொண்டாலும் முடிவுகள் கிடைக்கப் பெற நான்கு ஐந்து நாட்கள் செல்கின்றன. 

பிசிஆர் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதாக இருந்தால் 8000,9000 ரூபாக்கல் செல்கின்றன. ஒரு குடும்பத்தில் சகல அங்கத்தவர்களும் மேற்கொள்ளும் பட்சத்தில் 35000 ரூபா அளவில் செலவாகும்.இது அசாதாரன அறவீடுகளாகுப்.இவற்றில் அரசாங்கம் தலையிட்டு பாதித் தொகையை அரச செலவில் வழங்க வேண்டும். இன்று முன்னுரிமையில்லாத 100 அழகான நகரங்களை உருவாக்க நிதி ஒதுக்கியுள்ளனர்.இதுவா இன்று இந் நாட்டில் மக்களுக்கான முன்னுரிமை ஐக்கிய இராச்சியம் தற்போது அந் நாட்டு மக்களுக்கு மூன்றாவது கட்ட பூஸ்ட் தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ளனர். எமது நாட்டில் எது முன்னுரிமையாகவுள்ளது.அரசாங்கத்திடம் நிதி இருப்பதாக இருந்தால் கோவிட்டுக்கான சகல தேவைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு மக்களுக்கு நலன்களை பொற்றுக் கொடுங்கள். இவ்வாறு மேற்கொண்டால் பரவல் வேகத்தை ஓரளவேனும் குறைக்கலாம்.கோவிட் தொடர்பான தற்போதைய உண்மையான தரவுகளையும் தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படையாக அரசாங்கம் செயற்பட வேண்டும். இன்று திருமண மரண வீடுகளில் 100 பேருக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடுகின்றனர்,எத்தகைய சுகாதார நடைமுறைகளும் இல்லை.எனவே நாட்டையும் மக்களையும் கருத்திற் கொண்டு மீண்டும் ஒரு அலை ஏற்படாத வண்ணம் உறுதியான தீர்வுகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம். (Siyane News)

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by SJB - Api on Monday, August 2, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.