களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள், குறைபாடுகள் தீர்க்கப்படாத பல  விடயங்கள் இன முரண்பாடுகள் காலாகாலமாக சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு களுத்துறை மாவட்டத்தில் மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலைக்கான காரணம், தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள் ,போதை வஸ்து பாவனைக்கு அடிமையாகி உள்ள இளைஞர் சமுதாயம் ,கொவிட் காலத்தில் மக்களின் பொறுப்புகள், மருத்துவத் தேவைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு களுத்துறையில் இதுவரை காலமும் உருவாக்கப்படாத ஒரு அமைப்பாக களுத்துறை மாவட்டத்தின் ஊடக அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக அமைப்புகள் இதனை மேற்கொண்டு வந்தாலும் சமூக ரீதியில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும், முரண்பாடுகளுக்கும் ஏனைய ஊடகங்களால் பரப்பப்படுகின்ற  போலி பிரச்சாரங்களுக்கும்  இன்னுமொரு ஊடகத்தினால் தான் பதிலளிக்க முடியும் என்பது உண்மை. அந்தவகையில் இருபத்தோராம் நூற்றாண்டின் பலம்வாய்ந்த துறையான ஊடக பலத்தை பயன்படுத்தி இந்த அமைப்பு எதிர்காலத்தில் தொழிற்பட இருக்கின்றது.

இந்த அமைப்பானது களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பு என்ற பெயரை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.

இதன் ஆரம்ப கலந்துரையாடல் இணைய வழியாக(Zoom) கடந்த 23 ஆம் திகதி  இடம்பெற்றது .இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான என்.எம் .அமீன் தலைமை தாங்கினார்.அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை நகரசபை உறுப்பினரும், உதயம் தொலைக்காட்சியின் நிறுவனரும்-( செரண்டிப் அலைவரிசை), சுயாதீன ஊடகவியலாளருமான ஹிசாம் சுகைல் ,ஊடக மாணவர் மற்றும் சமூக ஆர்வலருமான முஹம்மத் நஸ்ரான் , ஊடகவியலாளர் ஆகில் அஹ்மத் , ஊடகவியலாளர் அப்ரா அன்ஸார்.

ஆகியோர் இணைந்து கலந்தாலோசித்து எடுத்த தீர்மானத்திற்கு இணங்க களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஊடகங்கள், ஊடகத் துறை மாணவர்கள், சமூக ஊடகங்களில் செயல்படுபவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான  இணைய வழி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவு செய்ய முடியும்.(தமிழ், முஸ்லிம்)

https://forms.gle/r8MnfXR93z3fdZ169


மேலதிக விபரம்:

அப்ரா அன்ஸார்-0766143279.(தமிழ் மொழி)

முஹம்மத் நஸ்ரான்- 071-3562853.(சிங்கள மொழி)

ஆகில் அஹ்மத்- 077-1629033(ஆங்கில மொழி)

தகவல்: களுத்துறை இளைஞர் ஊடக அமைப்புகருத்துரையிடுக

Blogger இயக்குவது.