மள்வானை எஸ்.எம்.எஸ் ஹசன் (பியகம பிரதேச சபை உறுப்பினர்) காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (9) இரவு வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

மள்வானை மக்களுக்காக பியகம பிரதேச சபை ஊடாகவும் தனிப்பட்ட வகையிலும் அவர் செய்த சேவைகளை பட்டியலிட முடியாது.

தன்னுடைய சேவை மனப்பாங்கிற்கு ஒரு களமாக அரசியலிலை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட ஆரம்பித்த அவர் முதல் தடவையாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஊடாக பியகம பிரதேச சபைக்கு போட்டியிட்டு மள்வானையில் வரலாறு காணாத வாக்குகளை பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இளம் துடிப்புடனும் சேவை மனப்பாங்குடனும் இருந்த சகோதரர் எஸ்.எம்.எஸ்.ஹசன் அவர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தேசியத்தலைவர் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் காலம் முதல் கட்சியின் ஒரு போராளராக செயற்பட்டவர் பிற்காலத்தில் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து மக்கள் சேவைக்கு தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக்கொண்டு செயற்பட்டார்.

வெள்ளப்பெருக்கு காலங்களில் முன்னின்று பணிசெய்யும் அவர் மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலைக்கும் அரசியல் ரீதியாக அவரால் முடிந்த வகையில் பல்வேறு உதவிகளை செய்திருந்தார் .

காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் முரீதான எஸ்.எம்.எஸ்.ஹசன் தல்கள முபாரக் மௌலானா தக்கியாவின் கட்டட குழு உறுப்பினராக இருந்து இறுதிவரை அதன் வேலைகளில் ஈடுபட்டுவந்தார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 11 மணிக்கு மள்வானை தல்கள முபாரக் மௌலானா தக்கியா மையவாடியில் இடம்பெறவுள்ளது .

அல்லாஹ் அவர்களை மன்னித்து  ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பாக்கியத்தை வழங்கப் பிரார்த்திப்போம் 

ஆமீன்

Fawsan Abdull Hameed

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.