இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அது தொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.பௌத்த இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ சமய தலைவர்களிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக சகல சமய தலைவர்களுக்குமான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்து சமயத் தலைவர்கள் 071 44 71 128 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.

இஸ்லாமிய சமய தலைவர்கள் 076 13 95 362 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

கிறிஸ்தவ சமய தலைவர்களுக்காக 071 40 61 132 என தொலைபேசி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.