ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் மீது அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமான முறையில் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலவசக் கல்விக்காக போராடிய மாணவர் ஆர்வலர்களை கைது செய்வது அதன் ஒரு படியாகும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,

துயரம், கண்ணீர் மற்றும் வலியின் மீதெழும் மக்களின் போராட்டங்களை அரசால் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.நாட்டின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு முன், அவற்றைத் உள்ளக ரீதியாக தீர்ப்பதே தனது கொள்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் கொரோனா பேரழிவு ஆபத்து காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பவற்றை மக்களின் நலன் கருதி தற்காலிகமாக சிறுது காலத்திற்கு நிறுத்தப்படுவதாக தெரிவித்த அவர், என்றாலும்

மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிரான செயற்பாடுகளை தாம் நிறுத்தப்போவதில்லை என்றும்  அவர் கூறினார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே,ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அமில சந்தீப உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு  இன்று காலை (06) சமூகமளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றம் அருகே நடத்திய போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் ஆர்வலர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேட்டறிந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.