கொவிட் தொற்றாளர்களின் நோய் நிலைக்கு ஏற்ப அவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லல் அல்லது வீடுகளில் வைத்து முகாமைத்துவம் செய்வது தொடர்பில் இன்று முதல் (19) மேல் மாகாணத்தில் புதிய முறைமை ஒன்றை கொவிட் தடுப்பு செயலணி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 

  1. புதிய முறைமையானது தொலைபேசி அழைப்பு அல்லது குறுந்தகவல் ஊடாக செயற்படுத்தப்படும்.
  2. தொற்றாளர்கள் கீழ்வரும் தகவல்களை உள்ளடக்கிய குறுஞ்செய்தியை 1904 என்ற இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். (சுவாசிப்பதில் சிரமம் உள்ள நோயாளர்கள் - A <Space> எனவும் காய்ச்சல் நிலை காணப்படும் நோயாளிகள் - B <Space> எனவும் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நோயாளிகள் - C <இடைவெளி> எனவும் டைப் செய்யவும். தொடர்ந்து வயது <இடைவெளி>, அடையாள அட்டை இலக்கம் <இடைவெளி>,  முகவரி <இடைவெளி> என்பவற்றை டைப் செய்யவும்.
  3. SMS மூலம் கிடைக்கும் தகவல்களை பெற்றதும் கொவிட் தடுப்பு செயலணி குறித்த தொற்றாளரை உரிய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்காக வைத்திய குழுவுக்கு அறிவிக்கும்.
  4. தொற்றாளர்களின் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டதன் பின்னர் 247 என்ற இலக்கம் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  5. வைத்திய குழு ஒன்று வீட்டில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து அவசியமான சேவைகளை வழங்குவார்கள். (அதற்காக 1390 என்ற இலக்கம் மூலம் சேவை வழங்கப்படும்)
(Siyane News)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.