ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சித் தலைமைகள் வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கை

இந்த முக்கியமான நேரத்தில் சுய முடக்குதலை நோக்கி நகருமாறு பொதுமக்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்

கோவிட் தொற்று கட்டுப்படுத்த முடியாதளவில் பரவி வருகிறது.இந்த நேரத்தில் அரசாங்கம் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் புறக்கணிப்பது ஒரு சோகமான நிலையாகும்.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சர்வதேச மற்றும் தேசிய மருத்துவர்கள், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டை உடனடியாக அறிவியல் ரீதியாக முடக்குதலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனால் இந்த அறிவுறுத்தல்களைக் பொருட்பப்படுத்தாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகத் தெரிகிறது.இந்த நேரத்தில், நியூசிலாந்து பிரதமர் டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அடையாளம் காணும் போது நாட்டை மூடி உடனடியாக நடவடிக்கை எடுப்பது ஒரு முன்னுதாரணம் அன்றி ஒரு இலட்சியமான செயற்பாடாகும.டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அவசர காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கோவிட் ஒழிப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதியால் கூட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம், அரசாங்கம் வைரஸின் பிறழ்ந்த விகாரங்கள் பரவுவதைப் பற்றி பேசுவதோடு மறுபுறம் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.அவ்வாறே நாடு முடக்குதலை மேற்கொள்ளாது என்றும்  கூறுகிறது.இந்த நான்கு காது கேளாத கதைகளின் அர்த்தம் என்ன?

கோவிட் கட்டுப்படுத்தல் சார்ந்த விடயங்களை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலின்பால் தொடர்ச்சியாக முடிவுகளை எடுத்த அரசாங்கம், இன்று மக்களின் உயிர்களைக் கொன்றுகொண்டே இருக்கிறது.இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மக்களின் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைக்க அரசாங்கம் முன்மொழிகிறது.இதைக் கூறியது அரசாங்க  அமைச்சரவையின் ஊடக பேச்சாளர்களில் ஒருவரே.எனவே, இதை ஒரு எளிய அறிக்கையாக நிராகரித்து விட  முடியாது.அரசாங்கத்தின் முந்தைய நடவடிக்கைகள் புராண சித்தாந்தத்தில் கோவிட் பரவல் நோயைக் குணப்படுத்த முயன்றது என்பது இரகசியமல்ல.முட்டிகளை கீழே போடுதல், காளி பானம் மற்றும் ரிதிகல பானம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் யதார்த்தமான உதாரணங்களாகும்.வேறு வழியின்றியே சாதாரண மக்கள் உதவிக்காக கடவுளிடம் திரும்புகிறார்கள்.அரசாங்க ஊடகப் பேச்சாளர் கடவுளிடம் மக்களை ஒப்படைப்பதன் கருத்தின் மூலம், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுவே தெளிவாகிறது.

நாட்டு மக்கள் தாமாகவே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளது.நாட்டின் பொருளாதாரம் சரிந்து விட்டதால், சர்வதேச அரங்கில் நம்பிக்கை முறிந்து விட்டதாலும் நாட்டை முடக்கி வைத்து விட்டு மக்களுக்கு ஆதரவளிக்க முடியாத அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.நாடு முடக்கப்பட்டால் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருளாதார ஆற்றல் அரசாங்கத்திற்கு இல்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறிய அறிக்கையால் இது உறுதி செய்யப்படுகிறது.

அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது?  பொது ஊழியர்களை வேலைக்கு அழைப்பது, பகுத்தறிவற்ற பயணக் கட்டுப்பாடுகள், ஊடக வெளியீடுகள் மற்றும் வர்த்தமானி அறிவிப்புகள் போன்ற அபத்தமான செயல்களில் ஈடுபட்ட வன்னம் நாட்டு மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கங்களை எட்டும் போது தினசரி இறப்பு எண்ணிக்கை மூன்று இலக்கமாக உயரும் போது மனிதப்படுகொலையில் ஈடுபடுவதன் மூலம் கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவா நாடு மூடப்படாதுள்ளது என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.ஆணவம், அதிகாரத்தில் உள்ளமையால் உண்மையைப் புரிந்துகொள்ளாமை மற்றும் திறமையின்மை ஆகியவை இன்று அரசாங்கத்தின் மூன்று தூண்களாக மாறிவிட்டன.இந்த நேரத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிர்ச்சேதத்திற்கும் அரசாங்கமே பொறுப்பு.

இந்த முக்கியமான நேரத்தில்,ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களை மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் சுயமாக முடங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன.குறைந்த பட்சம் தீர்மானமிக்க அடுத்த பத்து நாட்களுக்காவது அதன் செயல்பாட்டிற்கு பங்களிக்குமாறு வேண்டுகிறோம்.ஏனென்றால், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான திட்டங்கள் அல்லது தேவைகள் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்பதலாகும்.


சஜித் பிரேமதாச

ரவூப் ஹகீம்

மனோ கணேசன்

அமீர் அலி

ஐக்கிய மக்கள் சக்தி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.