(ரிஹ்மி ஹக்கீம்) 

வீடுகளில் வைத்து  மரணித்த 07 நபர்களின் சடலங்களை கடந்த 25 ஆம் திகதி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்கள் கொவிட் பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பீ.ஆர்.பீ.ராஜபக்ச (26) தெரிவித்தார். 

கடந்த 24 ஆம் திகதி இரவு வீடுகளில் வைத்தே மரணமடைந்த மூன்று ஆண்கள் மற்றும் நான்கு பெண்களுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணித்த மூன்று ஆண்களின் வயதுகள் 51, 71 மற்றும் 83 என்பதுடன், பெண்களின் வயதுகள் 79, 80, 88 மற்றும் 89 என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களில் நால்வர் கணேமுல்ல பொலிஸ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூவரும் கம்பஹா, வெலிவேரிய, பெம்முல்ல பொலிஸ் பிரிவுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.