தென் ஆபிரிக்காவுக்குஎதிராக நடைபெற்ற டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் இலங்கை அணியின் சில வீரர்கள் பூரண அர்ப்பணிப்புடன் அல்லாமல் அல்லது வேண்டுமென்றே பலவீனமாக விளையாடியதாக சில ஊடகங்களால் முன்வைக்கப்பட்டகுற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவிக்ககையில்,

அவ்வாறான எவ்வித முறைப்பாடுகளும் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமைத்துவத்தில் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கை அணி ஏற்கனவே தென் ஆபிரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை  2 - 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியதுடன் மட்டுமல்லாது தரப்படுத்தலிலும் முன்னேற்றமடைந்துள்ளது.

எனவே இது போன்ற பிழையான செய்திகள் இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் வீரர்களை குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு இருப்பதனால் செய்திகளை வெளியிடும் போது ஊடக விழுமியங்களை கடைப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (Siyane News) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.