ஆசிரியர்கள்  மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இன்று (06)  பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் ;இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அல்ல.  1994ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டது அதன் பின்னர் இடம்பெற்ற அரச சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பெரேரா சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவையின் சம்பளம் தொடர்பான சிக்கலை புறந்தள்ளி அரச சேவையின் முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்கும் ஏனைய அரச சேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு தொடர்ந்து 24 வருடங்களாக நிலவியதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.