ஆசிரியர் அதிபர் ஊதிய முரண்பாட்டிற்கு தீர்வு காணக் கோரி நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் சர்வ கட்சி மாநாடொன்று இன்று (06) நடைபெற்றது.

அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய இயக்கத்தால் இது ஏற்பாடு செய்யப்பட்டதோடு ,

முருந்த்தெட்டுவே ஆனந்த தேரர்,உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் மகா சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் இதற்கு தலைமை வகித்தவனர்.  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஆளும் கட்சி,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நாட்டில் கல்வி இரண்டு வருடங்களாக முற்றிலும் சரிந்துவிட்டதாகவும் இத்தகைய சூழ்நிலையிலும் கூட இந்த நாட்டின் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் மகத்தான தியாகங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

எத்தகைய கடினமான பிரச்சினைகள் இருந்தபோதிலும், முழு ஆசிரியர்கள் தலைமுறையாலும்  ஆற்றப்பட்டுவரும் பங்கு மகத்தானது என்றும்,அவர்களுக்கு அனைவரினதும் நன்றிகள் சென்றடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.