பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் கூட்டுறவு திணைக்களம் என்பவற்றின் நடவடிக்கைகளில் இனி ஒருபோதும் தலையிடாமல் இருப்பதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானம் எடுத்துள்ளதாக லங்கா தீப ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் குறித்த இரு நிறுவனங்களும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் கீழ் இருப்பதுடன், அமைச்சர் பந்துல கபினட் அமைச்சர் என்ற வகையில் அவற்றை மேற்பார்வை செய்து வந்தார்.
எனினும் இரு அமைச்சர்களும் தம்மீது அதிகாரத்தை பிரயோகித்தார்கள் என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளரின் அறிக்கை மற்றும் சில தரப்பினரிடம் இருந்து வந்த குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானத்தை அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)