தமிழக முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் புரட்சிதலைவர்  எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 34ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு  நகர மண்டபத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை MGR மன்ற தலைவர் இத்ரீஸ் மற்றும் அகில இங்கை மக்கள் திலகம் சமூக சேவை மன்ற தலைவர்

கலை சிறீ பாலண் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோசப் பர்னாந்தோ தலைமை தாங்கியதோடு விஷேட அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரண், இலங்கை அதிமுக செயலாளர் இம்ரான் நெய்னார், தினகரன் ஆசிரியர் கே.ஈஸ்வரலிங்கம்,ஸ்டார் டி,வி,அறிவிப்பளர் தயாரிப்பாளர் உவைஸ் ஷெரீப் . பிரபல பாடகர் அக்ஸரா இசைக்குழு, தலைவர்  கவிகமல் ஆகியோரோடு சிறப்பதிதிகளாக கவிஞர் கலா விஷ்வநாதன் கிராமிய கலை ஒன்றிய தலைவர் விஜயராஜ் கனேஷண். திரு.  முஷம்மில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வில் இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார் மற்றும் பிரமுகர்கள் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்

இக்கூட்டத்ததில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தகவல்

இலங்கை அ.தி.மு.க.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.