படம் - லங்காதீப

Update : திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸாரின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.


பாருக் ஷிஹான்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்  இத்துப்பாக்கிச் சூட்டினை  நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்   பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.