எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் இனிய நிகழ்வுகள்

பஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சயில் வெற்றி பெற்ற மாணவர்களை, ஆசிரியரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு, சித்திரக் கண்காட்சி நிகழ்வு என இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக பாடசாலை வளாகத்திலும்  பிரதான மண்டபத்திலும் முறையே 15/12/2021 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஜனாபா S. A. இஸ்மத் பாத்திமா அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீரிகம கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருவாளர் R.D. மெண்டிஸ்  அவர்களும் கௌரவ அதிதியாக  வலயக் கல்விப் பனிமணையின்  தமிழ் மொழிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் A.A.ரிஸ்வி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  இந்நிகழ்வு சுகாதார இடைவெளிகளைப் பேணி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது 171 புள்ளிகளைப் பெற்ற  மாணவி M.B.K.ஹிக்மாவும் 162 புள்ளிகளைப் பெற்ற M.R.ஸல்மாவும் மாலை அணிவித்து, கிண்ணம், பரிசில்கள், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் உயர் புள்ளிகளைப் பெற்ற அரச சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள்,

மேலும் இந்நிகழ்வின் இறுதியில் அதிதிகளின் கைகளால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

 ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பெற்றோர்கள் என அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தில் வந்து கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலையில் உள்ள சகல மாணவர்களது  ஆக்கங்களும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். கொரோனா காரணமாக உளநெருக்கடிக்கு ஆளான மாணவர்களுக்கு சந்தோஷத்தை உண்டுபன்னியது.  இந்நிகழ்வு மாணவர்களது உளநலத்தை வலுப்படுத்தியது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.