( மினுவாங்கொடை நிருபர் )

   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போன்று, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சுப் பதவிகளை எதிர்பாராது சேவையாற்ற முன்வர வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.

   கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

   அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,

   தான் சார்ந்த இனத்தை விற்பனை செய்து அரசியல் செய்யக்கூடாது. தேசிய கட்சிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தியே தேர்தல்களில் போட்டியிட வேண்டும்.

   வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது,  எப்போதும் ஒரு கொள்கையிலேயே பயணிப்பது பாராட்டுக்குரிய விடயம்.

   தேசியக் கட்சிகளில் தமிழ் முஸ்லிம் பிரதி நிதிகள் அங்கத்துவம் வகித்தால் மாத்திரமே, சிறுபான்மையினரின் தேவைகளுக்கு தீர்வைப் பெறலாம்.

   அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டாலும், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே குரல் எழுப்பி வருகிறது.

   மேலும், வளங்களை விற்றல் உள்ளிட்ட நாட்டுக்கு எதிரான விடயங்களுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் பின்வாங்காது.

   இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவி தமக்குக் கிடைத்திருந்த போதிலும், மலையக ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தான்  வெளியேறினேன் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

27/12/2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.