நாளாந்தம் இரண்டரை மணி நேர மின் வெட்டினை அமுல்படுத்துமாறு மின் சக்தி அமைச்சிடம் இலங்கை மின்சார சபை (CEB) கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணி நேர மின் வெட்டும் பி.ப 6.00 மணி முதல் 9.00 மணி வரையான காலப் பகுதியில் 2 தடவைகளில் 45 நிமிட மின் வெட்டினை அமுல்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது தொடர்பான கோரிக்கை இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் பீ.டப்ளியூ ஹெந்தஹேவாவினால் அமைச்சின் செயலாளர் வசந்தா பெரோவிட்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 


நன்றி : விடியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.