தற்போதைய நிலையில் உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் எமது நாட்டின் நிதி அமைச்சருக்கு ஏழு மூளைகள் அல்ல, 14 மூளைகள் இருந்தாலும் டொலர் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடியினை நீக்குதல், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் எளிதான காரியம் அல்ல என்று காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தான் பொதுஜன பெரமுன கட்சியை ஸ்தாபித்து நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து இந்த நாட்டை பாதுகாத்தார். கொரோனா தொற்று, எரிபொருள் வரிசை, டொலர் தட்டுப்பாடு, ரஷ்யா - உக்ரைன் யுத்தம் ஆரம்பித்தமை என்பவற்றுக்கு அவர் பழி இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.