(எம்.எஸ்.எம். ஹனீபா)

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வீட்டுத் தோட்ட பயிரச்செய்கையை மதஸ்தளங்களிலும் முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கும் அனுப்பி வைககப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

இலங்கையில் வீட்டுத்தோட்டம் எனும் எண்ணக்கருவினை ஊக்குவிப்பது தொடர்பான் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க காய்கறிகள் பழங்கள், தானியங்கள், கீரைகள், கிழங்கு வகைகள் போன்ற அனைத்து அத்தியாவசியப் பயிர்களையும் பயிரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பரிபாலனத்தின் கீழ் உள்ள சமயஸ்தலங்களுக்குச் சொந்தமான வெற்று நிலங்களில் அத்தியாவசியமான பயிர்களை பயிரிடுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.