மேல் மாகாணத்துக்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு நேற்று  ஜூலை 29ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

எனினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வருமான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அதிகாரிகளால் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஜூலையில் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.