முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் 5 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு நாரஹேன்பிட்டி எல்விடிகல பிளேஸில் இருக்கும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெறும்.


இந்நிகழ்வில் பலஸ்தீனின் இலங்கைத் தூதுவர் ஸெய்ட் ஹம்தல்லாஹ் பிரதம
அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். கௌரவ அதிதியாக கொழும்பு மாநகர பிரதி மேயர் அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால் கலந்து கொள்ளவுள்ளார். 

நினைவுப் பேருரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க நிகழ்த்தவிருப்பதாக அகில இலங்கை வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார். - Siyane News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.