நாட்டுக்குத் தேவையான மருந்து வகைகளில் 40 சதவீதமானவற்றை தற்போது உள்நாட்டில் தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதற்கான பல்வேறு காரணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.