ஏ.ஆர்.ஏ.பரீல்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­தல்கள் முஸ்லிம் சமூ­கத்தை பல கோணங்­களில் பாதிப்­புக்­குள்­ளாக்கி விட்­டன.

இவ்வாறான பாதிப்புகளிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க சிவில் சமூக இயக்­கங்­க­ளோ அல்­லது விட­யங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளோ எந்­தவித  முன்­னெ­டுப்புகளையும் மேற்­கொள்­ளாமை கவலைக்குரியது.

இந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளைத் தொடர்ந்து ராகம, மஹ­ர பிரதேசத்தில் வாழும் முஸ்­லிம்கள் தொழு­வ­தற்கு பள்­ளி­வா­ச­லொன்று இல்­லா­து படுகின்ற ­கஷ்­டங்கள் குறித்தே இக் கட்டுரை விளக்க முனைகிறது.

மஹர சிறைச்­சாலை வளா­கத்­தினுள் அமைந்­தி­ருந்த பள்­ளி­வாசலையே அப் பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர். பின்னர் இப் பள்ளிவாசல் பலவந்தமாக சிறைச்சாலை அதிகாரிகளால் மூடப்­பட்டுவிட்­டதால் அப்­பள்ளிவாசலில் இயங்கி வந்த அஹ­திய்யா பாட­சா­லையும் மூடப்­பட்­டு­விட்­டது. 2019 இல் அஹ­திய்யாப் பாட­சா­லையில் 56 மாணவ, மாண­விகள் கற்­றார்கள். 8 ஆசி­ரி­யர்கள் கட­மையில் இருந்­தார்கள். அனைத்­துக்கும் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலின் பின்பு மூடு­விழா நடத்­தப்­பட்­டு­விட்­டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திக­தியின் பின்பு பள்­ளி­வா­ச­லுக்குள் முஸ்­லிம்கள் பிர­வே­சிப்­பது முழு­மை­யாக தடை­செய்­யப்­பட்­டு­விட்­டது. சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் இத்­தடை உத்­த­ர­வினைப் பிறப்­பித்தார்.

2019 ஆம் ஆண்டு நோன்பு கால­மது. முஸ்­லிம்­களின் நோன்பு ஏற்­பா­டு­க­ளுக்கும், விசேட தொழு­கை­க­ளுக்கும் தடை­வி­திக்­கப்­பட்­டது. நோன்பு பெருநாள் தொழு­கை­யை நடாத்துவதற்குக் கூட அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

ஜும்ஆ தொழு­கைக்­காக கஷ்­டப்­படும் மக்கள்
மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் இயங்கி வந்த பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் 400 குடும்­பங்கள் தங்­களைப் பதிவு செய்து கொண்­டி­ருந்­தன. தற்­போது 300 குடும்­பங்­களே இருக்­கின்­றன. இக்­கு­டும்­பங்கள் ஜமா அத்தார் சங்­கத்தில் பதிவு செய்து கொண்­டுள்­ளன. பதிவு செய்து கொள்­ளாத குடும்­பங்­களும் இப்­பி­ர­தே­சத்தில் வாழ்­கின்­றன. அப்­ப­குதி மக்­களில் 90 வீதத்­தினர் மலே சமூ­க­த்தி­னர்­க­ளாகும்.

பள்­ளி­வா­சல் மூடப்­பட்டு விட்­டதால் இப்­ப­குதி மக்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆ தொழு­கைக்கு செல்­வதில் பல சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். அவர்கள் மஹர பகு­திக்கு அண்­மித்­துள்ள மாபோலை, எண்­ட­ர­முல்ல, அக்பர் டவு­ண் பள்ளிவாசல்­க­ளுக்குச் செல்ல வேண்­டி­யுள்­ளது. இப்­பள்­ளி­வா­சல்கள் மஹ­ர­யி­லி­ருந்து சுமார் 5 கிலோ மீற்­றர்­க­ளுக்கும் அப்­பாலே அமைந்­துள்­ளன. இதனால் வயோ­தி­பர்கள் மற்றும் நோயா­ளிகள் ஜும்ஆ தொழு­கைக்­காக குறிப்­பிட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்குச் செல்ல முடி­யாத நிலை உள்­ளது. பெருநாள் தொழு­கை­க­ளுக்கும் அந்­நி­லை­மையே காணப்­ப­டு­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம் பெற்று மூன்று வரு­ட­காலம் பூர்த்­தி­யா­கி­விட்ட நிலையில் மஹர பகுதி முஸ்­லிம்கள், குறிப்­பாக மஹர சிறைச்­சாலை பகு­தியைச் சேர்ந்த முஸ்லிம் குடும்­பங்கள் தொழு­வ­தற்கு இட­மின்றி அல்­ல­லு­று­வதை ஒரு­போதும் அனு­ம­திக்­க­மு­டி­யாது. 116 வருட கால வர­லாற்­றினைக் கொண்ட பள்­ளி­வா­சலை சிறைச்­சாலை நிர்­வாகம் மூடி­விட்டு, பள்­ளி­வா­சலை பயன்­ப­டுத்த முஸ்­லிம்­க­ளுக்குத் தடை விதித்­து­விட்டு அங்கே புத்தர் சிலை­யொன்­றினை வைத்து சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்றி அமைத்­தி­ருக்­கின்­றமை மிகப் பெரிய அநீதியாகும். முஸ்­லிம்­களின் மத உரி­மைகள் பறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் முழு­தாக இதுவோர் இன ஒடுக்கு முறை­யென்றே கூற வேண்டும்.

சிறைச்­சா­லை­ அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்றம்

மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் 2020 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டது.

அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்­கப்­பட்­டது. பள்­ளி­வா­சலில் இருந்த ஆவ­ணங்கள் மற்றும் குர்ஆன் பிர­தி­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது எவ­ருக்கும் தெரி­யாது.


2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து பள்­ளி­வா­ச­லுக்குள் முஸ்லிம்கள் எவரும் பிர­வே­சிக்கக் கூடாது, மத அனுஷ்­டா­னங்கள் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற உத்­த­ர­வினை சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் வழங்­கி­யி­ருந்தார். அதனால் பள்­ளி­வா­ச­லுக்குள் என்ன நடக்­கி­றது என்­பதை அப்­ப­குதி ஜமாஅத்­தார்கள் எவ­ரி­னாலும் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை.

பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்­டமை மற்றும் அங்கு புத்­தர்­சிலை வைக்­கப்­பட்டு பெளத்த மத அனுஷ்­டா­னங்கள் இடம்­பெற்­றமை போன்ற விப­ரங்­க­ளை தான் முகநூல் பக்கம் மூலமாகவே அறிந்து கொண்டதாக பள்­ளி­வா­சலின் தலைவர் ஹபீல் லக்­சானா கூறுகிறார்.

அஹ­தியா பாட­சா­லைக்கும் மூடு­விழா
மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் மூடப்­பட்­டதால் பள்­ளி­வா­சலில் இயங்­கி­வந்த அஹ­திய்யா பாட­சா­லையும் மூடப்­பட்­டுள்­ளது. அஹ­திய்யா பாட­சா­லையை தொடர்ந்தும் நடத்த முடி­யாது இப்­ப­குதி மக்கள் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

2019 ஏப்ரல் மாதம் பள்­ளி­வாசல் மூடப்­பட்­ட­போது அஹ­திய்யா பாட­சா­லையில் 53 மாணவ மாண­விகள் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்தார்கள். தற்­போது இப்­ப­கு­தி­யில் சுமார் 100 மாணவ மாண­விகள் இருக்­கி­றார்கள். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இம்­மா­ண­வர்கள் குர் ஆனைக் கற்க முடி­யாது மார்க்கக் கல்­வியைக் கற்க முடி­யாது பின்­ன­டைவு கண்­டுள்­ளனர்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் மூடப்­பட்­டுள்ள பள்­ளி­வா­ச­லுக்குப் பக்­கத்தில் கட்­டி­ட­மொன்றில் அஹ­திய்யா பாட­சா­லையை ஆரம்­பிக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போதும் பெரும்­பான்மை இன மக்­களின் எதிர்ப்பு கார­ண­மாக இதற்கு கிராம அலு­வலர் அனு­மதி தர மறுத்­து­விட்டார் என பள்­ளி­வாசல் நிர்­வாகத் தலைவர் ஹபீல் லக்­சானா தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், உலமா சபையின் வத்­தளை கிளை மூலம் அஹ­திய்யா பாட­சா­லையை மீள ஆரம்­பிப்­பது தொடர்பில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார். பிரதேச மக்களும் அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபை இதுவிடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மஹ­ரயில் இயங்­கி­வந்த அஹ­திய்யா பாட­சாலை மூடப்­பட்டு மூன்று வரு­டங்­க­ளா­கியும் உலமா சபை இது­வரை மெளனம் சாதிப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். உல­மா­ சபை இது விட­யத்தில் உட­னடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

மைய­வாடி
மஹர மைய­வாடி காணி 1970 இல் பிர­தேச சபை­யினால் ஒதுக்­கப்­பட்­ட­தாகும். இதற்­கான உறுதி இருக்­கி­றது. என்­றாலும் அது பாரா­ளு­மன்றின் மூலம் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என நீர்வழங்கல் சபை தெரி­விக்­கி­றது. இந்­தக்­காணி துறை­முக அதி­கா­ர­ ச­பைக்கு சொந்­த­மான காணி­யாகும். இக்­காணி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர ­ச­பைக்-கு வழங்­கப்­பட்ட பின்பு பிர­தேச சபைக்கு வழங்­கப்­பட்டு பிர­தேச சபை­ மூலம் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. ஆனால் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் ஹபீல் தெரி­விக்­கிறார்.

இம்­மை­ய­வா­டியில் இது­வரை சுமார் 115 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். தற்­போது பள்­ளி­வாசல் மூடப்­பட்டு சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதால் இப்­ப­குதி மக்கள் ஜனாஸா நல்­ல­டக்­கங்­களின் போது ஜனாஸா தொழு­கையை நடாத்­து­வதில் பல அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். மைய­வா­டி­யிலே ஜனாஸா தொழு­கை­யினை நடாத்த வேண்­டி­யுள்­ளது.

பள்­ளி­வா­சலை இடம் மாற்­றுக
தற்­போது மூடப்­பட்­டுள்ள சிறைச்­சாலை வளாக பள்­ளி­வா­சலை சிறைச்­சாலை வளா­கத்­துக்கு அருகில் வேறோர் இடத்­துக்கு இடம் மாற்­றித்­த­ரு­மாறு- பள்­ளி­வாசல் நிர்­வாகம் கோரிக்கை விடுத்­துள்­ளது. மைய­வா­டிக்கு அருகில் இதற்­கான காணியை இனங்­கண்­டுள்ளோம். இந்தக் காணி சிறைச்­சாலை மதி­லுக்கு அப்பால் தூரத்தில் அமைந்­துள்­ளது.
2020 ஆம் ஆண்டு மஹர பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்­வ­றை­யாக மாற்­றப்­பட்டு அதற்குள் புத்தர் சிலை வைத்து சிலை அதி­கா­ரிகள் மத அனுஷ்­டா­னங்­களை மேற்­கொண்­ட­தி­லி­ருந்து அப்­ப­கு­தி­மக்கள் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரி­டமும் அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரி­டமும் கோரிக்கை விடுத்தும் பலன் ஏற்­ப­டாத நிலையில் பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்கொண்­டுள்­ளது.

பள்­ளி­வா­சலை வெறோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான அரச காணி­யொன்­றினை ஒதுக்­கித்­த­ரு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் கம்­பஹா மாவட்ட செய­லா­ள­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இது தொடர்பில் அவ­ருடன் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேச்சு வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளது.

இதே­வேளை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அரச காணி­யொன்று ஒதுக்­கப்­ப­டா­விட்டால் தனியார் காணி­யொன்­றினை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பிலும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள், நீதி,மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா மூடப்­பட்ட மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வா­சலை மீண்டும் முஸ்­லிம்­க­ளிடம் கைய­ளிக்­கு­மாறு சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருநதும் அந்த உத்­த­ரவு அதி­கா­ரி­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வா­சலின் வர­லாறு
மஹர சிறைச்­சா­லையில் பிரித்­தா­னி­யரின் ஆட்­சிக்­கா­லத்தில் 1902 ஆம் ஆண்டு சிறைக்­கை­தி­க­ளுக்­கி­டையே கலகம் ஒன்று ஏற்­பட்­டது. இதன் காரணமாக கட­மை­யி­லி­ருந்த சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்குப் பதி­லாக மலே இனத்தைச் சேர்ந்த சிறைச்­சாலை பணி­யா­ளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கட­மை­யி­லி­ருந்த சிங்­கள அதி­கா­ரிகள் மீது அரசு நம்­பிக்கை இழந்­த­த­னை­ய­டுத்தே மலே இனத்­த­வர்கள் அப்­ப­த­வி­க­ளுக்கு நிய­மனம் பெற்­றனர். மலே இனத்­த­வர்கள் தொழு­வ­தற்கு பள்­ளி­வாசல் அமைப்­ப­தற்கு நிலம் ஒதுக்­கப்­பட்­ட­துடன் மைய­வா­டிக்கும் நிலம் ஒதுக்­கப்­பட்­டது. பள்­ளி­வா­சலும் நிறு­வப்­பட்­டது.

இப்­பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. பின்பு முஸ்லிம் அதி­கா­ரி­களின் எண்­ணிக்­கையில் குறைவு ஏற்­பட்­ட­த­னை­ய­டுத்து அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் குடும்­பத்­த­வர்­க­ளினால் பள்­ளி­வாசல் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல் ‘மஹர பள்­ளி­வாசல்’ என்ற பெயரின் கீழ் 1962 ஆம் ஆண்டு வக்பு சபை­யினால் பதிவு செய்­யப்­பட்­டது. 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி R/1076/GM/31 எனும் இலக்­கத்தின் கீழ் இப்பள்ளிவாசல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்­பள்­ளி­வா­சலை ராகம, கட­வத்த, மஹர, கிருந்­தி­வல, வல்­பொல, குருத்­த­லாவ, பேர­லந்த போன்ற பகுதி மக்கள் தொழு­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்தி வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பள்­ளி­வாசல் சுமார் 119 வரு­டங்­க­ளுக்கு முன்பு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகும். 72 வரு­டங்­க­ளுக்கு முன்பு தற்­போ­தைய (மூடப்­பட்­டுள்ள) கட்­டி­டத்­துக்கு இட­மாற்­றப்­பட்­ட­தாகும்.
பள்­ளி­வாசல் வக்­பு­ச­பையில் பதிவு செய்­யப்­பட்டு 55 வரு­டங்கள் கடந்­துள்­ளன.

உட­னடி தீர்வு வழங்­கப்­ப­ட­ வேண்டும்
2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இப்­பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்டுள்ளது.

இதனால் இப்­ப­கு­தி­யி­லுள்ள சுமார் 300 முஸ்லிம் குடும்­பங்கள் தங்­க­ளது சமயக் கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளன.
இப்­ப­கு­தியில் வாழும் வயோ­தி­பர்­களும், நோயா­ளி­களும் ஜும்ஆ தொழுகை பெருநாள் தொழு­கைகள் மற்றும் நோன்­பு­கால விசேட தொழு­கை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலையில் இருக்­கின்­றனர்.

இப்­ப­குதி மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­படும் ஜனா­ஸாக்­களின் ஜனாஸா தொழு­கைகள் திறந்த வெளியில் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அஹ­திய்யா பாட­சாலை மாணவ, மாண­விகள் கல்­வியைத் தொடர முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மஹர பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் நிரந்­தர தீர்­வொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வதில் கவனம் செலுத்­தி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. பள்­ளி­வா­சலை பிறிதோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்காக அரச காணி­யொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இம்­மு­யற்­சி­க­ளுக்கு அரச சார்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், அமை­சர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். அர­சாங்­கத்­துக்கு அமுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்­யப்­பட்டுள்ள நூற்­றாண்­டுக்கு மேற்­பட்ட வர­லாறு கொண்ட பள்­ளி­வாசல் தற்­போது சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு அறை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. ஓய்வு அறை மாத்­தி­ர­மல்ல பெளத்த மத அனுஷ்­டா­னங்­களும் அங்­கு­மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. புத்தர் சிலை­யொன்றும் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பழைமை வாய்ந்த பள்ளிவாசலை மூடி­விட்டு அவ்­வி­டத்தில் புத்தர் சிலை­யுடன் கூடிய ஓய்வு அறை இயங்­கி­ வ­ரு­கின்­ற­மையை எவ்­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.
புத்தர் சிலை நிறு­வு­வதை முஸ்லிம்கள் எதிர்க்­க­வில்லை. பள்ளிவாசலுக்குள் புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களை கவலைகொள்ளச் செய்துள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் புறம்பான ஓரிடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கலாம். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு முயற்சிக்கவில்லை. அப்பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளனர்.

தற்போதைய கலாசார அலுவல்கள் அமைச்சரும், புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரும் மஹர பள்ளிவாசல் விவகாரத்துக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.- Vidivelli

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.