ஈராக்குடனான தமது எல்லைகளை உடன் அமுலாகும் வகையில் மூடியுள்ளதாக ஈரான் இன்று அறிவித்துள்ளது. 

ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் இடம்பெற்று வருவதுடன் நாடளாவிய ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்றைய நாளில் மாத்திரம் குறைந்த பட்சம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் ஈராக்குக்கு பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு ஈரான் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அத்துடன் ஈராக்குக்கான விமானப் பயணங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் ஈராக்கிய விமான நிலையத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஈரானிய பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அவசர விமானமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.