பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானிப்படுத்தப்பட்ட புதிய பயங்கரவாதப் பட்டியலில் கவிஞர் அஹ்னாப் ஜஸீம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் உள்ளிட்ட பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ), ஜமாஅதே மில்லது இப்ராஹீம் (JMI), விலாயத்துஸ் ஸைலானி என்பவற்றுடன் தாருல் அதர் பள்ளிவாசல், குர்ஆன் மத்ரஸா, மற்றும் சேவ் த பேர்ள்ஸ் தொண்டு நிறுவனம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பனவும் பயங்கரவாதப் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 நிறுவனங்களுடன் இந்த நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

புதிதாகப் பட்டியலிடப்பட்டுள்ள சேர்வ் த பேர்ள்ஸ் தொண்டு நிறுவனத்தில் விரிவுரை நிகழ்த்திய கவிஞர் அஹ்னாப் ஜஸீம் புதிய பயங்கரவாதப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் எழுதிய ‘நவரசம்’ கவிதைப் புத்தகத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமான கவிதைகள் அடங்கியிருந்ததாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

உண்மையில் அவரது கவதைகள் தீவிரவாதத்துக்கு எதிரானவையாகவே அமைந்திருந்தன என அவரது தரப்பிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

அவரது தடுத்து வைப்பு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுப்பப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னிச்சையான கைதுகளுக்கான செயலணி அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடந்து கொண்ட விதம் தவறானது எனக் குறிப்பிட்டிருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.