கண்டி அம்பேப்பிட்டி ரவுண்டவோட்டிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த கோடீஸ்வரியான கமனி ரணசிங்க (வயது 64) என்ற பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண்ணை சமயலறை அருகில் உள்ள களஞ்சியலறையில் இழுத்துச் சென்று கொலை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நேற்றுமுன்தினம் முற்பகல் 2.30 மணிக்கு ஒருவா் கத்தியுடன் இரத்தக் கறைகளுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறித் தப்பிச் செல்வதை அருகில் வசிப்பவா்கள் அவதானித்துள்ளனர்.

தனது கணவா் காலமானதையடுத்து அவரின் கடைகள், மற்றும் சொத்துக்களை இவரே கவனித்து வந்துள்ளாா். 

இவருக்கு இருந்த 2 பிள்ளைகளும் திருமணம் முடித்து அவுஸ்திரேலியாவில் குடியேறிவிட்டனர்.

தனது கணவர் இறந்ததும் இப் பெண் தனிமையிலேயே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தப்பிச் செல்வதற்கு பாவிக்கப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் சாரதியை பொலிஸார் கண்ணொருவையில் வைத்து அடையாளம் கண்டுள்ளனர். 

இப் பெண்ணின் சொத்துக்களை அபகரிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் கொலையா ? அல்லது வேறு விதமாகவா?  என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். 

சிறிது காலத்திற்கு முன்பே இவரது கணவர் காலமாகியிருந்ததால் இவரின் 2 பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து கண்டி விசேட பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.