ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின்
இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிய அணி 7 விக்கட்டுக்களால் பங்களாதேஸ் அணியை வெற்றி கொண்டது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்றது.

இதில் மொஸாடக்; ஹூசைன் 48 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை பெற்றார்

பந்து வீச்சில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஸீட் கான் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

இந்தநிலையில் 128 என்ற ஓட்ட இலக்குக்காக துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி, 18.3 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்று தமது வெற்றியை பதிவு செய்தது.

நஜிபுல்லாஹ் சட்ரான் 17 பந்துகளில் 43 ஓட்டங்களையும் இப்ராஹிம் சட்ரான் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.