கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகளில், 18 வயதுக்கு கீழ்பட்ட பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

கம்பஹா சுமேத கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணியும் திஹாரிய அல் அஸ்ஹர் தேசிய பாடாசாலை அணியும்  மோதின.

போட்டியின் இறுதியில் 2 - 1 என்ற கோல் அடிப்படையில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

16 வயதுக்கு கீழ்பட்டோருக்கான பிரிவினருக்கான போட்டியிலும் கஹட்டோவிட்ட பத்ரியா அணி சம்பியனாகியமை விஷேட அம்சமாகும். - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.