⏩ பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியின் பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை...

⏩ மெனிங் விற்பனைத் தொகுதியின் முறைகேடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியில் இருக்கின்ற பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கட்டளையிட்டார். நகர அபிவிருத்தி அதிகார சபை, வியாபாரச் சங்கம், பொலிஸ் மற்றும் ஏனைய அரசதுறை அலுவலகங்களோடு சேர்ந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து அதை தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறிய அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கட்டளையிட்டார்.

பிற சக்திகள் மூலம் பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியை வெவ்வேறு முறைகளுக்குப் பயன்படுத்துவதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்போது குறித்த துர் நடவடிக்கைகளில் ஈடுபடுகுன்ற நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பொலிசுக்கு கட்டளையிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது பற்றி தெரிவிக்கும் போது பேலியகொட விற்பனைத் தொகுதியில் இருக்கின்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பேலியகொட விற்பனையாளர்கள் சங்கத்துடன் சனிக்கிழமை (16) நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வியாபாரத் யொகுதியின் கடைகள், வாகனத் தரிப்பிடம், மலசல கூடம், மின்சாரம், நீர் உட்பட்ட வசதிகளைக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

பேலியகொட மெனிங் வியாபாரத் தொகுதியை அதிக இலாபம் பெறும் ஒன்றாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கட்டளையிட்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கும் போது தம்மால் முடியுமான சகல நேரங்களிலும் வியாபாரிகளுக்காகக் குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கும் பொழுது வியாபாரிகளுக்கு மட்டுமன்றி நுகர்வோருக்கும் சுமையாக அமையாத வகையில் பேலியகொட வியாபாரத் தொகுதியைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் நிறுவனத்திற்குச் சுமையாக ஆகாத வகையில் பேலியகொட மெனிங் வியாப நிலையத்தைக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.  அதற்காக குறுகிய கால, இடைப்பட்ட கால மற்றும் நீண்ட காலத் தீர்வுடன் புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கட்டளையிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கும் போது பேலியகொட வியாபாரத் தொகுதி புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு இடமாக மாற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு மெனிங் சந்தையில் உள்ள வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

கொழும்பு நகரத்தில் இருக்கின்ற அதிக வாகன நெரிசலுக்குரிய தீர்வாகக் கொழும்பு மெனிங் சந்தையும் மீன் சந்தையும் பேலியகொடவுக்கு 2013 ஆம் ஆண்டு நகர்த்தப்பட்டது.

விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை, வடக்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகிய அனைத்துடனும் பேலியகொட தொடர்புபட்டிருப்பதால் பொருட்களைக் கொண்டு செல்வரற்கு வசதியான இடமாக இது இருக்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாடு பூராகப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடியவாறு உள்ளது.

பேலியகொட மெனிங் சந்தைத் தொகுதி 13.5 ஏக்கர் பகுதியில் இருக்கின்ற மொத்த விற்பனைத் தொகுதியாகும். இதை நிர்மாணிப்பதற்கு 6.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த சந்தைத் தொகுதியில் 1,169 விற்பனை அலகுகள் இருக்கின்றது.

நான்கு மாடிகளைக் கொண்ட மெனிங் சந்தைத் தொகுதியில் 03 மாடிகளுக்கு லொறிகளை நேரடியாகக் கொண்டு வந்து பொருட்களை இறக்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. ஊழியர் ஓய்வு விடுதி, உணவகம்,குளிரூட்டி வசதிகள், 600 வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடிய வாகனத் தரிப்பிட வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த இடமுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் நிமேஷ் ஹேரத்,அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, பேலியகொட மெனிங் சந்தைத் தொகுதித் தலைவர் எம்.எம். உபசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2022.09.18

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.