முதலாவது அரகல முடிந்து விட்டது. நாட்டை ஒன்றிணைக்கும் இரண்டாவது அரகல இங்கு ஆரம்பிப்போம் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைவரும் கட்சி பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். அது தமக்கு அல்லாது அடுத்த தலைமுறையினருக்காக பலம்வாய்ந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை வெற்றிகொள்வதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 76வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

"ஒன்றாக நாட்டை கட்டியெழுப்புவோம்" என்பதே ஐ.தே.க. இன் 76வது ஆண்டு விழாவுக்கான தொனிப்பொருளாகும்.  

ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது பின்னணியில் எதிர்ப்பு பதாகை போன்ற பதாகைகளை ஏந்திய ஒரு குழு மேடையில் தோன்றியது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.