சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து, பிரதிவாதிகளை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும், அவர்களின் கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிகளான திரு.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, பின்னர் விசாரணையை நவம்பர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.