தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலை வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, ​​பாடசாலை ஆசிரியர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமம், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை போன்ற காரணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு வரும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

மேலும் பல தரப்புகளின் தகவல்களுடன் நாட்டின் தற்போதைய கல்வி நிலை குறித்து சமூகத்திற்கு தெரிவிக்க இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் பயன்படும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.