கடந்த வருடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளில் அதிகமானவை மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றுள் கொழும்பு மாவட்டம் முதன்மையானது என அதன் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை விட அதிகமான வழக்குகள் சமூகத்தில் பதிவாகாமல் மறைக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவிக்கையில், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களினால் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது பல சந்தர்ப்பங்களில் பதிவாகவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.