இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, மத்திய,சப்ரகமுவ,மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 150 mm வரையிலான  பலத்த மழையும் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழையும் பெய்யலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற வேளைகளில்    பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி  காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாக் காணப்படும்.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தென்படுவதனால் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக்  கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும். ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும்  அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.