(றாசிக் நபாயிஸ்)
----------------------------------------
இஸ்லாமிய சிந்தனை முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையின் சுமார் 40 வருட காலமாக மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களினால் தொடராக எழுதப்பட்ட தொகுப்பை
'கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள்' எனும் படைப்பை மருதமுனை ஆசிரியர் நெளபாஸ் ஜலால்தீன்
தொகுப்பாசிரியராக இருந்து வெளியீட்டு வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (2020/11/12) மருதமுனை கலாசார நிலைய மண்டபத்தில் பி.ப.4.00மணிக்கு நூல் அறிமும் செய்யப்படவுள்ளது.
அம்பாறை மாவட்ட
றாபிததுன் நளீமிய்யீன்
ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வை றாபிததுன் நளீமிய்யீன் அம்பாறை மாவட்டத் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஜ.எம்.
இஸ்ஹாக் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜாமியா நளிமீய்யா, இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் அஷ்-ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்
இதன் போது நூலாய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அஷ்-ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.
இதன் போது இந்நிகழ்வின் முதன்மை பிரதியை ஜாஹி வீவர்ஸ் பிறைவட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் கலாநிதி எம்.ஜ.உபைதுர் ரஹ்மான் பெறவுள்ளார்.