எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரபலமான 3 இடங்களில் போட்டியிடுவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது.

 கொழும்பு மாநகர சபை, தெஹிவளை-கல்கிசை மாநகர சபை மற்றும் கொலன்னாவ நகர சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணத்தை சமர்ப்பித்திருந்த போதிலும் அக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 இந்த முக்கிய பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் அதனால் கட்சியாக போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது சனிக்கிழமை மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.