பாராளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் பொழுது கொழும்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக அல்ஹாஜ் ஏ.எச்.எம் பௌசி சத்தியபிரமாணம் செய்து பதவியேற்க உள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்து கொழும்பு மாநகர சபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஐக்கிய மக்கள் சக்திப் பட்டியலில் அடுத்து இருந்த அல்ஹாஜ் ஏ. எச்.எம் பௌசி  நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அரசியல்வாதியான 
அல்ஹாஜ் ஏ. எச்.எம் பௌசி மேல்மாகாண சபை, கொழும்பு மாநகர சபை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு 1990 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் பதவியை வகித்த பௌசி பின்பு மேலும் பல அமைச்சுக்களை மஹிந்த ராஜபக்ச அரசிலும் , சந்திரிக்கா பண்டாரநாயக்க அரசிலும் பதவி வகித்தார்."எல" பௌசி என பெரும்பான்மை மக்களால் பாராட்டப்படுகின்ற ஒரு அமைச்சராக இருந்தவர் ஆவார்.

கொழும்பு மத்திய பகுதியை நீண்டகாலமாக பிரதிநிதித்துவப்படுத்திய பௌசி கடந்த பொதுத்தேர்தலில் மிகச் சிறிய வாக்குத் தொகைகளால் தோல்வி கண்டார்.அதன்படி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தவர் இப்போது பட்டியலில்
அடுத்த பெயராக இருக்கும் பௌசி எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பெயர் இன்று அல்லது நாளை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. 1937 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி பிறந்த பௌசி மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.