மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் உயிரிழப்பு

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்கம்பியை இழுக்க முயன்ற போது இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவர் 38 வயதுடைய ஹேகித்த, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

 மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.