தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், சமையல் கற்றுக்கொள் என தாய் திட்டியதால் கோபமடைந்த இளம்பெண், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ளது கீழக்கோடன்குளம் என்ற பகுதி.

இங்கு வடக்கு தெருவில் கிறிஸ்டில்லா மேரி என்ற 19 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இவர்களுக்கு வரும் 1-ம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேரி, தனது மொபைல் போனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் வீட்டில் பெற்றோர் வேலை சொன்னாலும் அதை செய்யாமல் மொபைல் போனை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எரிச்சல் அடைந்த தாய், தனது மகள் மேரியை திட்டியுள்ளார். மேலும் திருமணமாக இன்னும் சில நாட்களே இருக்கிறது என்றும், சமையல் கற்றுக்கொள் என்றும் கூறிக்கொண்டே இருந்துள்ளார். இதனை பெரிதாக கண்டுகொள்ளாத மேரி, தனக்கு விருப்பப்பட்டதை மட்டுமே செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தினரும் தாய், தனது மகளை திட்டியுள்ளார். அதோடு 1-ம் திகதி ஆக இன்னும் 1 வார காலமே இருக்கும் நிலையில், "மாமியார் வீட்டில் கஷ்டப்பட போற" என்று வழக்கமாக தாய் வசைபாடுவது போல் வசைபாடியுள்ளார். இதனால் மிகவும் மனம் நொந்துபோன மேரி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

மருந்தை குடித்த சில நிமிடங்களிலே மயங்கி விழுந்துள்ளார். தனது மகள் மயங்கி கிடப்பதை கண்ட தாய், உடனே கதறி அழுது அவரை உறவினர்களோடு சேர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு 2 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இதுகுறித்து பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மூலைக்கரைப்பட்டி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், சமையல் கற்றுக்கொள் என தாய் திட்டியதால் கோபமடைந்த இளம்பெண், தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.